தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான், மற்றும் என் ஜி கே உள்ளிட்ட படங்களைத் தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கங்குவா ரிலீஸான பின்னர் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் காஷ்மீரா பரதேசி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மூன்றாவது வாரத்தில் கோயம்புத்தூரில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த படம் ஒரு ஆன்மீக ஃபேண்டசி படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரும் இதை உறுதிப் படுத்துவது போலவே வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.