Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் கங்குவா வி எஃப் எக்ஸ் பணிகளில் நடந்த அதிரடி மாற்றம்!

vinoth
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (08:39 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா
 படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தேதியில் வேட்டையன் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. அதனால் கங்குவா தீபாவளிக்குத் தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் படத்தில் இன்னும் வி எஃப் எக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் முழுவதும் நிறைவடையவில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் கங்குவா படத்தின் வி எஃப் எக்ஸ் பணிகள் இன்னும் முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் 7 நிறுவனங்களிடம் காட்சிகளைக் கொடுத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments