சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படும் சமீபத்தில் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இணைந்தார். இவர் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்தோடு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக படத்தில் நடிக்கும் நடிகர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகரான சௌபின் தயாள் என்ற கதாபாத்திரத்திலும், நாகார்ஜுனா ‘சைமன்’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூலி படத்தில் இணைந்துள்ளது பற்றி பேசியுள்ள நாகார்ஜுனா “கைதி படத்தில் இருந்தே நான் உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்பட்டேன். கூலி படத்தில் என்னை இணைத்ததற்கு நன்றி லோகி. உங்களோடும் தலைவரோடும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.