Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா 44 படத்தில் இணைந்த இன்னொரு நடிகை… அவரே கொடுத்த அப்டேட்!

vinoth
புதன், 20 நவம்பர் 2024 (14:26 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி  மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி சில மாதங்களிலேயே முழுவதும் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாக ஸ்ரேயா கூறியுள்ளார். அதில் “சூர்யா 44 படத்தில் ஒரு அற்புதமான பாடலுக்கு நான் நடனமாடியுள்ளேன். அந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும்படி சிறப்பாக வந்துள்ளது. அது ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் “ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் தேதியில் சிக்கல்!

மீண்டும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்த பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படக்குழு!

பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தும் DNA முதல் நாள் வசூலில் மந்தம்..!

அறிவு குறைபாடு அவங்களுக்கு இல்ல..! நிதர்சனத்தை காமெடியாக சொன்ன Sitaare Zameen Par! - திரை விமர்சனம்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments