Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 மொழிகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் கங்குவா? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

vinoth
சனி, 6 ஏப்ரல் 2024 (07:41 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது வி எஃப் எக்ஸ் மற்றும் மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளில் எந்த குறையும் வந்துவிடக் கூடாது என படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றி வரும் தனஞ்செயன் படம் பற்றி அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் போது 20 மொழிகளில் ரிலீஸ் ஆகும் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகும் போது 10 மொழிகளில் இந்த படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

சென்னையில் நடக்கும் கேம்சேஞ்சர் பட விழாவில் கலந்துகொள்ளும் லோகேஷ் & விஜய்?

தெறி படத்தின் ரீமேக் உரிமை இத்தனைக் கோடி ரூபாயா?... ஓப்பனாக அறிவித்த தயாரிப்பாளர் தாணு!

காதலிக்க நேரமில்லை படத்தின் பின்னணி இசைப் பணிகளைத் தொடங்கிய ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments