Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

ஒரு சகோதரருக்கு வாய்ப்பளித்தேன், இலட்சக்கணக்கான சகோதரர்கள் கிடைத்தனர்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகழ்ச்சி

Advertiesment
சிம்பு
, வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (09:14 IST)
ஒரு சகோதரருக்கு வாய்ப்பளித்தேன், இலட்சக்கணக்கான சகோதரர்கள் கிடைத்தனர்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும், அவருக்கு சிம்பு ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து திக்குமுக்காட வைத்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு என்ற ஒரே ஒரு சகோதரனுக்கு நான் ’மாநாடு’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பளித்தேன். ஆனால் சிம்புவால் எனக்கு அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் சகோதரர்களாக கிடைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நேற்றைய நாளை மிகச்‌ சிறப்பாக்கிய அன்பின்‌ சிம்புவும்‌... அவரது வெறித்தனமான ரசிகர்களுக்கும்‌ மனதின்‌ ஆழத்திலிருந்து நன்றிகள்‌. *மாநாடு* படத்தை **சிலம்பரசன்‌* என்ற ஒரு சகோதரனோடு தான்‌ தொடங்கினேன்‌. ஆனால்‌ இன்று அவர்‌ எனக்குப்‌ பரிசளித்திருப்பதோ பல லட்சக்கணக்கான சகோதரர்களை. அத்தனை பேருக்கும்‌ மனப்பூர்வ நன்றிகள்‌. நன்றி மட்டும்‌ போதாது. மாநாடு நம்‌ ஒவ்வொருவருக்கும்‌ எவ்வளவு முக்கியம்‌ என்பதை அறிவேன்‌.
 
எத்தனை தடைகள்‌ வந்தாலும்‌ கடந்து மாநாட்டை வெற்றிப்படமாகத்‌ தருவதே, நான்‌ பதில்‌ செய்யும்‌ நன்றியாக இருக்க முடியும்‌. செய்வோம்‌. இணைந்தே வெல்வோம்‌. மிகப்‌ பெரிய நம்பிக்கையை ஒரு தயாரிப்பாளனான எனக்கு ஏற்படுத்தியுள்ளீர்கள்‌. இந்த டானிக்கை அருந்திய பலத்தோடு எதிர்‌ வரும்‌ நாட்களை அர்த்தமுள்ளதாக்கிக்‌ கொள்கிறேன்‌. நன்றி நன்றி
 
இவ்வாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் திறக்கப்படுகிறது தியேட்டர்கள்: என்னென்ன நிபந்தனைகள் இருக்கலாம்?