Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வேற லெவலில் இருக்கும் ‘- தனுஷ் பட பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (14:23 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்க இருக்கும் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரெக்கார்ட் செய்யப்பட்டு விட்டதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் தன் பக்கம் திருப்பிய இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், இவர் இயக்கிய அடுத்த திரைப்படமான ’மாபியா’ என்ற திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகி அட்டர் பிளாப் ஆனது.

இதன் பின்னர் கார்த்திக் நரேன் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இப்படம் தனுஷின் 43 வது படமாக உருவாகவுள்ளது.  ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் ’வேற லெவல் பாடல்கள் தனுஷ் 43 படத்துக்காக இசையமைத்து தயாராகிவிட்டன. பாடல்களை DFire மற்றும் விவேக் ஆகியவர்கள் எழுதியுள்ளனர். அனைத்து விவரங்களும் குவாரண்டைனுக்குப் பிறகு அறிவிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments