Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சிவகார்த்திகேயன் அதிர்ச்சி..!

jailer
, வியாழன், 4 மே 2023 (18:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வந்த ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’ . இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் என்பதும் அவருடன் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா,   ஆகியவர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 11ஆம் தேதி சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் என் வேலையைதான் செய்தேன்… ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்த்திய நிறுத்திய போலீஸ் விளக்கம்!