Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாணாக்காரன் படக்குழுவை அழைத்து பேசிய ரஜினி… விக்ரம் பிரபு நெகிழ்ச்சி!

டாணாக்காரன் படக்குழுவை அழைத்து பேசிய ரஜினி… விக்ரம் பிரபு நெகிழ்ச்சி!
, புதன், 13 ஏப்ரல் 2022 (16:48 IST)
விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஏப்ரல் 8 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை ஜெய்பீம் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்திருந்த வெற்றிமாறனின் உதவியாளர் தமிழ் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகிப் பரவலாக கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய டிவீட்டில் ‘ சூப்பர் ஸ்டார் போன் செய்து டாணாக்காரனில் எனது நடிப்பைப் பாராட்டியது அற்புதமான நிகழ்வு. நான் கனவில் கூட நினைக்காத சாதனை இது. கனவுகளுக்கான முயற்சியில் இறங்கும்போது இப்படி அதிசயமான நிகழ்வுகள் நடக்கும்’ எனக் கூறியுள்ளார். கும்கி திரைப்படத்துக்கு பிறகு சரியான வெற்றிப்படம் கிடைக்காமல் விக்ரம் பிரபு போராடி வந்த நிலையில் தற்போது டாணாக்காரன் அவருக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நூதனமா ஹேக் பண்ண ட்ரை பண்றாங்க… நடிகை ஷாலு ஷம்முவின் அலர்ட் பதிவு!