Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் சிங்கர் சீசன் 5 - இறுதிச்சுற்று

சூப்பர் சிங்கர் சீசன் 5  -  இறுதிச்சுற்று
, புதன், 14 ஜூன் 2017 (13:06 IST)
மிக பிரபலமான மற்றும் அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியானது சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர்  சீசன் 5, இறுதி சுற்றை நெருங்கியுள்ளது வரும் ஜூன் 17 ஆம் நாள் சென்னை DB ஜெயின் காலேஜ் மைதானத்தில் மாலை 6 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி  நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்.


 
ஒரு விஷயத்தின் மீது நமக்கு ஏற்படும் காதல் லட்சியமாக மாறும், அப்படி இசை மீது காதல் கொண்டு அதை லட்சியமாகியவர்கள் பலர் உண்டு. அந்த கனவுகளை நினைவாக்கும் ஒரு மேடை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, பத்தாண்டுகளை கடந்து இசை துறைக்கு பல பாடகர்களை தந்துள்ளது. இதன் பெருமையாக திரை யுலகில் பல ஹிட் பாடல்களை குடுத்த சூப்பர் சிங்கர்ஸ் இந்த இறுதி சுற்றில் ஒன்று கூடி பெருமைசேர்க்கவுள்ளனர். 
 
இந்த திறமைகளை மேலும் மெருகேற்றினார் வாய்ஸ் எக்ஸ்பெரட் திரு. அனந்த் வைத்தியநாதன் அவர்கள். மேலும் நமது சூப்பர் சிங்கர் நட்சத்திரங்களான ஸ்ரீனிவாஸ், நிகில் மேத்யூ, பிரவீன் சாய்வி மற்றும் சாய் சரண் பயிற்சியாளர்களாக இந்த ஜூனியர்களை மெருகேற்றினர். இந்த சீசனின் நடுவர்களாக பாடகி சித்ரா, பாடகர் திரு.மனோ, பாடகி சுபா அவர்கள் இந்த குழந்தைகளை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர். இந்த இறுதி சுற்று போட்டியிலும் நடுவர்களாக போட்டியாளர்களை ஊக்கப்படுத்த வருகிறார்கள். மேலும் இசை யுலகின் பெருமையான திரு. ஷங்கர் மஹாதேவன் அவர்கள் நடுவர்கள் பேனலில் இணையவுள்ளார்.

webdunia

 
கடந்த ஒரு வருடமாக பல பாடகர்கள், இசை கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்து இறுதி போட்டிக்கு தேர்வான போட்டியாளர்கள்  கௌரி SSJ 05, பவின் வினோத் SSJ 07, ப்ரீத்திகா SSJ 04, தனுஷ் SSJ 03 மற்றும் மோனிகா SSJ 01 ஆவர். இவர்கள் அனைவரும் அந்த பிரமாண்ட மேடையில் பாட தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.
 
பெருமைவாய்ந்த பல இசை கலைஞர்களை பார்த்த இந்த மேடை. இன்று வெள்ளித்திரையில் பின்னணி பாடகர்களாக வலம் வரும் சூப்பர் சிங்கர்ஸ், இந்த பிரமாண்ட மேடையில் பல இசை ஜாம்பவான்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் முன் பாடி அற்புதமான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டனர். இம்முறை இவர்களின் கடின முயற்சி திருவினை ஆக்க உங்களது விருப்பத்துக்குகந்த பாடகர்க்கு  கிடைக்க, https://supersinger.in என்னும் இணையதளத்தின் மூலம் ஜூன் 11 முதல் முதல் ஜூன் 17 நாள் இரண்டாவது சுற்று முடியும் வரை  வாக்களிக்கலாம்.

webdunia

 
இந்த முறை கிராண்ட் ஃபினாலே  லைவ்   இன்னும் பிரமாண்டமாய் அரங்கேறவிருக்கிறது. மேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இசை விருந்தளிக்க உள்ளார்கள். இன்னும் பல பாடல்களும், கச்சேரிகளும், வியக்கவைக்கும் இசை விருந்துகளும் அரங்கேரவுள்ளது, காணத்தவராதீர்கள் !!!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரலாகும் வனமகன் கதாநாயகியின் கிளாமர் டான்ஸ் - வீடியோ!