Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளரின் கமெண்ட்லயே பைரசி லிங்க் போட்ட குசும்பன்! கொதித்தெழுந்த எஸ் ஆர் பிரபு!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:42 IST)
எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படம் ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலிஸானது.

கார்த்தி மற்றும் ராஷ்மிகாவுக்காக மிக நல்ல ஓபனிங் இருந்தாலும், படத்தின் கதை மற்றும் திரைக்கதையால் கடுப்பான ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல இணைய விமர்சகர்களும் இந்த படத்தைக் கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் மாஸ்டர் படத்துக்கு பின்னர் திரையரங்கில் வசூல் செய்யும் தமிழ்ப்படமாக சுல்தான் அமைந்துள்ளது.

இந்நிலையில் சுல்தான் படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் சமூகவலைதளப் பதிவு ஒன்றில் அந்த படத்தின் திருட்டுத்தனமான இணைய டவுன்லோட் லிங்கை ஒருவர் பகிர அதைப் பார்த்து கடுப்பான பிரபு ‘அடேய் என் கமெண்ட்ல வந்தே என் படத்தோட லிங்க போட்றியா?... இதோ வரேண்டா ‘ என பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments