Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டார் ஓட்டலில் குவாரண்டைனில் இருந்த பாடகி சுசித்ரா திடீர் அலறல்: என்ன காரணம்?

Advertiesment
suchitra
, புதன், 28 அக்டோபர் 2020 (12:25 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்து கொள்வதற்கு முன் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் குவாரண்டைனில் இருக்கும் பாடகி சுசித்ரா திடீரென நள்ளிரவில் திடீரென கத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே ஆர்ஜே அர்ச்சனா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்று கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் பாடகி சுசித்ரா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ளார். அதற்கு முன் அவர் 14 நாட்கள் ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென நேற்று நள்ளிரவு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த சுசித்ராவின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனையடுத்து அறையிலிருந்து மிக வேகமாக வெளியே வந்து என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் காப்பாற்றுங்கள் என்று சுசித்ரா கதறியதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து விஜய் டிவி நிர்வாகத்திற்கு ஸ்டார் ஓட்டல் ஊழியர்கள் தகவல் அளித்ததாகவும், அவர்கள் விரைந்து வந்து சுசித்ராவுக்கு தைரியம் அளித்து மீண்டும் அறையில் தங்க வைத்தனர் என்றும் கூறப்படுகிறது
 
உண்மையிலேயே சுசித்ராவை கொலை செய்ய யாராவது வந்தார்களா? அல்லது கனவில் ஏற்பட்ட பிரமையா என்று தெரியவில்லை 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தையும் என்னையும் படத்தில் இருந்து தூக்கிட்டாங்க: பிக்பாஸ் சுரேஷின் வீடியோ வைரல்