Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவான ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெயின்! இசை ஏ.ஆர்.ரஹ்மான்?

Sinoj
வெள்ளி, 5 ஜனவரி 2024 (14:38 IST)
பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெயின் ஆக்சன் படத்தில்  ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்திய சினிமாவின் பிரபல ஸ்டண்ட் இயக்குனராக அறியப்படுபவர்  பீட்டர் ஹெயின். இவர், மின்னலே, ரன், அரசு, காக்க காக்க, திருமலை, அந்நியன், ஆதி, கஜினி( இந்தி) மகதீரா உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி சண்டை காட்சிகளில் ரசிகர்களை கவரும்படி இயக்கியுள்ளார்.

இந்த நிலையில்,  ட்ரெண்ட்ஸ் சினிமாஸ், எம்டி.சினிமாஸ், ஏ.எம். தயாரிப்பில், இயக்குனர் மா. வெற்றி இயக்கவுள்ள ஆக்சன் படத்தில் பீட்டர் ஹெயின் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை படக்குழு அணுகவுள்ளதாகவும், இப்படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெயின் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கவுள்ள படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹாலிவுட் பாணியில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் ஹீரோயின் ஆகும் தமிழ் நடிகை!

எகிறும் செலவு… அஸர்பைஜானில் இருந்து ஐதராபாத்துக்குத் தாவும் விடாமுயற்சி படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments