Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமுத்திரக்கனி அலுவலகத்தில் மர்ம பெண்? சிசிடிவியில் அதிர்ச்சி காட்சி!

Advertiesment
சமுத்திரக்கனி அலுவலகத்தில் மர்ம பெண்? சிசிடிவியில் அதிர்ச்சி காட்சி!
, சனி, 8 அக்டோபர் 2022 (15:01 IST)
பிரபல தமிழ் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி அலுவலகத்தில் மர்ம பெண் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. படங்கள் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்தும் உள்ளார் சமுத்திரக்கனி.

இவரது அலுவலகம் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலெட்சுமி நகர் 10வது தெருவில் உள்ளது. சமீபத்தில் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம பெண் ஒருவர் அங்கிருந்த கார் கதவை திறந்து உள்ளே இருந்த மழை கோர்ட்டை எடுத்து அணிந்து சென்றுள்ளார்.

இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், இதுகுறித்து சமுத்திரகனியின் மேனேஜர் விவேக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமுத்திரக்கனி அலுவலகத்தில் நுழைந்த மர்ம பெண் யாரென போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 கோடி கிளப்பில் இணைந்த சூப்பர் ஸ்டாரின் ''கார்ஃபாதர்'' !