Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாம் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஸ்ரீதேவி

Advertiesment
மாம் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஸ்ரீதேவி
, செவ்வாய், 14 மார்ச் 2017 (16:23 IST)
1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர்,  பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 
80-களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீ தேவி, பிறகு பாலிவுட் படங்களில் மட்டும் கவனம்  செலுத்தி வந்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான புலி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிக்கு வந்தார். 3 ஆண்டுகளாக  எந்த திரைபடங்களிலும் நடிக்கவில்லை.
 
இந்நிலையில் தனது கணவரான போனி கபூரின் தயாரிப்பில் உருவாகும்  ‘மாம்’ என்ற இந்தி திரைப்படத்தில் தற்போது  நடித்துவருகிறார்.  இதன்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  ”ஒரு பெண் சவால்களை சந்திக்கும்போது” எனும் வாசகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

webdunia
ஸ்ரீதேவியின் இறுக்கமான முகத்துடனும், பல மொழிகளில் ‘மாம்’ எனும் வாசகத்துடனும் இந்த போஸ்டர்  உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம்  ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் வாரிசு நடிகர் மீது காண்டான நடிகை