Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் பல வீடியோக்கள் உள்ளது; ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி எச்சரிக்கை!

Advertiesment
இன்னும் பல வீடியோக்கள் உள்ளது; ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி எச்சரிக்கை!
, வியாழன், 19 ஏப்ரல் 2018 (17:36 IST)
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இன்னும் பல வீடியோக்களை வெளியிட உள்ளதாகவும் அவரை விமர்சித்த ஜீவிதாவை தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று முதலில் பிரபல இயக்குநர் ஒருவரை மீது குற்றம்சாட்டினார். பின்னர் தெலுங்கு திரை அலுவலகம் முன்பு ஆடைகளை கழற்றி அரை நீர்வாண போராட்டம் நடத்தினார்.
 
பிரபல நடிகர் பவன் கல்யாண் மீது புகார் கூறினார். இந்த விவகாராம் பெரும் சர்ச்சையாக மாறியது. பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தனர். 
 
நேற்று நள்ளிரவு ஸ்ரீரெட்டி தற்கொலை செய்து போவதாக கூறியதாக சமூக ஆர்வளர் சந்தியா தெரிவித்தார். 
 
இதையடுத்து ஸ்ரீ ரெட்டியை ஏமாற்றி படுக்கைக்கு அழைத்துச் செல்ல அவர் ஒன்றும் குழந்தை இல்லை என்றார் நடிகை ஜீவிதா ராஜசேகர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஸ்ரீரெட்டி அவரை எச்சரித்து வருகிறார்.
 
இன்னும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் அதற்கு தயாரக இருக்குமாறு ஜீவிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கமே இல்லை என்று கூறும் இளம் நடிகை ஒருவரின் வீடியோவை வெளியிடப்போவதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் படத்தில் யோகி பாபு