Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அஜித்துக்கு வில்லனாக முடிவெடுத்த கிரிக்கெட் வீரர்

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2017 (18:52 IST)
விஜய், அஜித் படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.


 

 
இந்திய கிரிக்கெட் அணியில் பந்திவீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் சூதாட்ட புகாரில் சிக்கி கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். கேளராவை சேர்ந்தவர் இவர் தற்போது முழு நேர நடிகராகிவிட்டார். தற்போது இவர் நடிக்கும் டீம் 5 என்ற திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. இதில் நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடிக்கிறார்.
 
இந்நிலையில் அவர் படத்தில் நடிப்பத்து பற்றி கூறியதாவது:-
 
என் தந்தை மற்றும் சகோதரி ஆகிய இருவரும் நடிகர்கள். எங்கள் குடும்பம் சினிமா குடும்பம். நான் நடிக்க வந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இது எனது 3வது படம். ஆனால் முதலில் வெளியாகும் படம் இதுதான். தமிழ் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது.
 
தற்போது கன்னடத்தில் வில்லனாக நடிக்கிறேன். அஜித், விஜய் படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றார்.

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments