Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடல் கேட்கிறார், எழுத முயற்சிக்கின்றார்: எஸ்பிபி குறித்த அப்டேட்டை தெரிவித்த எஸ்பிபி சரண்

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:27 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை தற்போது நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும் சீராக இருப்பதாகவும் குறிப்பாக அவரது நுரையீரலில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் சற்று முன் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் அவர் தன்னுடைய பாடல்களை கேட்டுக்கொண்டே அந்த பாடலை பாட முயற்சிப்பதாகவும் அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும், ஒருசிலவற்றை தனக்கும் தன்னுடைய அம்மாவுக்கும் எழுதி சொல்ல முயற்சிக்கிறார் என்றும் எஸ்பிபி சரண் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்து வரும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு தானும் தனது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ரசிகர்களின் பிரார்த்தனையால் அவர் நிச்சயம் கொரோனாவில் இருந்து மீண்டு நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் 
 
மேலும் எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ’எஸ்பிபி அவர்கள் வெண்டிலட்டர் மற்றும் எக்மோ கருவியுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சுய நினைவுடன் இருப்பதாகவும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக் கொள்வதாகவும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து எஸ்பிபியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments