Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி கட்சியில் செளந்தர்யாவுக்கு பதவியா? பரவும் வதந்திகள்

ரஜினி கட்சியில் செளந்தர்யாவுக்கு பதவியா? பரவும் வதந்திகள்
, வெள்ளி, 16 மார்ச் 2018 (16:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கட்சி ஆரம்பிக்கும் முன்பே அவரை தாறுமாறாக விமர்சித்து வரும் நெட்டிசன்களும் அரசியல் தலைவர்களும், அவரிடம் என்ன குறை காணலாம் என பூதக்கண்ணாடி வைத்து தேடி வருகின்றனர். அப்படி இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேடையேறும், ரஜினி தன்மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வாயை அடைத்து விடுகிறார்.

இந்த நிலையில் ஒருசில ஆர்வக்கோளாறுகள் தனுஷை ரஜினியின் அரசியல் வாரிசு என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மேலும் இன்னொரு தரப்பினனர் ரஜினி கட்சியில் செளந்தர்யாவுக்கு முக்கிய பதவி என வதந்தி பரப்பி வருகின்றனர்.

மனைவி, மகள்கள் உள்பட யார் மீது ரஜினிக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதுதான் உண்மை. மனைவி நடத்தும் நிறுவனத்தின் வாடகை பாக்கி முதல் மகள் விவாகரத்து வரை அனைத்துமே ரஜினியை பாதித்த விஷயங்கள். இந்த நிலையில் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் போல் வாரிசுகளை ரஜினி கண்டிப்பாக தனது கட்சியில் இறக்க மாட்டார் என்றே ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘மாரி 2’ ரிலீஸ் எப்போது தெரியுமா?