Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சூரி செய்த காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (14:32 IST)
கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இப்போது வரை 60 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம்.

இந்நிலையில் தற்போது கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் காட்டுப்பகுதிகளில் நடப்பதால் வன விலங்குகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றின் தாக்குதல் இருக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸோடு படப்பிடிப்பை நடத்துவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சூரி தற்போது பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் விடுதலை படப்பிடிப்புத் தளத்திலேயே உடல் பயிற்சிகளை செய்துள்ளார். அந்த வீடியோவோடு மேலும் “எங்கேயும் எப்போதும் எதுவேண்டுமானாலும் செய்யலாம்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Actor Soori (@soorimuthuchamy)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments