Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் சூரரைப் போற்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கா? சில தகவல்கள்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (17:06 IST)
சூர்யா நடித்து ஓடிடி பிளாட்பார்மில் ரிலிஸ் ஆகும் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாகவுள்ள நிலையில் அது தியேட்டரில் ரிலிஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தினார். 

இது திரையுலகில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டபின் அதில் ரிலீஸாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்தது. அதற்கான வாய்ப்பு ஒன்று உள்ளதாம். ஓடிடி நிறுவனத்துடன் செய்து கொண்டபடி சூரரைப் போற்று திரைப்படத்தை ஓடிடியில் ரிலிஸ் ஆன 180 நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலிஸ் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments