Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் ஜே சூர்யாவின் ‘கடமையை செய்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (11:11 IST)
எஸ் ஜே சூர்யா நடிப்பில் அடுத்து ரிலீஸாக உள்ள திரைப்படம் கடமையை செய். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். இப்போது அவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை, இரவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயனின் டான் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் முத்தின கத்திரிக்கா படத்தின் இயக்குனர் வெங்கட் இயக்கும் கடமையை செய் படத்தில் நடித்துள்ளார். அவருடன் இந்த படத்தில் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை.

இதையடுத்து இப்போது ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது. இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments