ஷாருக் கானுக்கு வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா? அதிர்ச்சி கொடுக்கும் விஜய் சேதுபதி!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (10:10 IST)
நடிகர் விஜய் சேதுபதி ஷாருக் கான் – அட்லி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளது விஜய் சேதுபதி என்ற தகவல் தற்போது பரவி வருகிறது. முன்னர் இந்த வேடத்தில் ராணா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியில் சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ஆனால் அவற்றில் ஒன்று கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் இந்தி படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா என்ற ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments