Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 1 மே 2019 (18:44 IST)
நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, தற்போது அமிதாப்பச்சனுடன் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து முடித்து ரிலீசுக்கு காத்திருந்த படமான 'மான்ஸ்டர்' என்ற திரைப்படத்தின் சென்சார், ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது
 
மான்ஸ்டர் படம் தற்போது சென்சாருக்கு 'யூ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் இந்த திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது., 
 
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில், சபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை 'மாயா', 'மாநகரம்' படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments