Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தல 'அஜித்துக்கு பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக்

'தல 'அஜித்துக்கு  பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக்
, புதன், 1 மே 2019 (14:38 IST)
தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித்குமார். இவருக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆரம்பகாலத்தில் யாரும் உதவி செய்யாத போது தனது சொந்த உழைப்பால் கடுமையான முயற்சியால் சினிமாவில் கதாநாயகனாக உயர்ந்தார். 
இதனாலேயே அஜித்தை ரசிகர்கள் பலரும் தங்கள் நெஞ்சில வைத்துச் சுமக்கிறார்கள். இத்தனை பலம் கொண்ட தனது ரசிகர் மன்றத்தை சில வருடங்களுக்கு முன்னர் அஜித் கலைத்துவிட்டு, ரசிகர்களிடம்’’ உங்கள் அப்பா, அம்மாவிற்கு சேவை ஆற்றுங்கள் என்று வெளிப்படையாகக் கூறினார்.’’ இந்த தைரியமான முடிவை பல நடிகர்களும் எடுக்கத் தயங்கும் போது அஜித் எடுத்ததால் அவர் ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாக விட்டார் என்றே சொல்லலாம்.
webdunia
இத்தனை பெருமைகள் கொண்ட வீரமான நடிகர் அஜித்துக்கு இன்று உழைப்பாளர் தினத்தில்(மே 1 நாளில் )பிறந்தநாள்! ஆதலால்  அவரது பிறந்த நாளை அவரது விசுவாசமான ரசிகர்கள் ஆசை ஆசையாய் கொண்டாடி வருகின்றனர்.
webdunia
தற்போது  டுவிட்டரில்  அவது பெயரில், ஹேப்பி பர்த்டே தல , ஹேப்பி பர்த்டே அஜித்குமார் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர். அது இந்திய அளவில் டிரண்டிங் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய படத்தில் டானாக மாறி மிரட்டும் ராதிகா சரத்குமார்