என்ன ஆனது வினாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம்?

vinoth
வியாழன், 11 செப்டம்பர் 2025 (11:31 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து அமரன் மற்றும் மதராஸி என்ற ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அவர் நடிப்பில் அடுத்து ‘பராசக்தி’ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் அளித்த நேர்காணலில் தனது அடுத்த படங்களின் வரிசை பற்றி பேசியுள்ளார். அதில் “அடுத்து சிபி சக்ரவர்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். அதுதான் என்னுடைய அடுத்த படம். அதற்கடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம். புஷ்கர் காயத்ரி ஆகியோரோடு இணைந்து ஒரு கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதில் அவர் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் குட்னைட் புகழ் வினாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன படம் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இந்த படம்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

சூர்யா 45, சூர்யா 46 இனிமேல் தான் ரிலீஸ்.. அதற்குள் சூர்யா 47 படப்பிடிப்பு தொடக்கம்..!

இளையராஜாவை தேடுனாங்க.. எங்கேயும் போகாத மனுஷன்.. எங்க போனாரு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments