Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெச் ராஜா குற்றச்சாட்டு… சிவகார்த்திகேயன் நாசூக்காக கொடுத்த பதில்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (08:11 IST)
நேர்காணல், பேட்டி என எல்லாவற்றிலும் சர்ச்சையான கருத்துக்களை கூறி சலசலப்பை ஏற்படுவது  எச் ராஜாவிற்கு ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய எச். ராஜா, ஜெயபிரகாஷ் என்ற ஜெயிலரை தற்போதைய பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கொலை செய்துவிட்டார்.  ஜெயபிரகாஷ் என்பவர்  நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை தான் என கூறி அதிசர்ச்சி அளிக்கும் வகையில் பேசினார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பகிரப்பட்டு பேசப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்த தெளிவு ஒன்று கிடைத்துள்ளது. 

அதாவது சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜெயபிரகாஷ் இல்லை ஜி.தாஸ். அதே போல் அவர் கொலை செய்யப்பட்டு மரணிக்கவில்லை. உடல்நலக்குறைவால் மரணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஹெச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதையடுத்து இப்போது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹெச் ராஜாவின் சர்ச்சை பேச்சு குறித்து இதுவரை எந்த கருத்தையும் சிவகார்த்திகேயன் தரப்பு வெளியிடவில்லை.  ஆனால் இப்போது மறைமுகமாக ஒரு பதிலை கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். சினிமாக் கலைஞர்களுக்கு அவர் சமீபத்தில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். வழக்கமாக தனது பெயரிலேயே அளிக்கும் சிவா, இண்ட முறை தனது தந்தை தாஸின் அறக்கட்டளை மூலமாக அந்த நலத்திட்ட உதவிக்கான நிதியை அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments