Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் & முருகதாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது?

vinoth
புதன், 27 நவம்பர் 2024 (08:49 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் நடிக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது முருகதாஸ் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஜனவரி 1 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் பட்டியலில் சூர்யாவின் கங்குவா… பின்னணி என்ன?

கோட் பட ட்ரோல்களால் மன அழுத்தத்தில் இருந்தேன்… நடிகை மீனாட்சி சௌத்ரி ஓபன் டாக்!

ரேஸ் பயிறிசியின் போது அஜித் சென்ற கார் விபத்து…! உடல்நிலை குறித்து மேலாளர் வெளியிட்ட தகவல்!

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments