Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் மாவீரன் ஷூட்டிங் நிறுத்தமா? பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:58 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டாக்டர் மற்றும் டான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். ஹீரோயின் வேடத்துக்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் விருமன் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு வீடியோ வெளியானது. படத்துக்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பெயரில் ரஜினி படம் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ ஒன்று கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து தொடங்கிய படப்பிடிப்பு 3 நாட்கள் நடந்த நிலையில் அதன் பிறகு நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு… விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments