Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் வெப் சீரிஸில் குருதி ஆட்டம் இயக்குனர் ஸ்ரீகணேஷ்!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:51 IST)
பொன்னியின் செல்வன் கதையை அனிமேஷன் வெப் சீரிஸாக ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கி வருகிறார்.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது.

இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் பலமுறை முயன்றார்கள். ஆனால் பிரம்மாண்டம் காரணமாக தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கி இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார். அதே நேரத்தில் பொன்னியின் செல்வனை வெப் சீரிஸாகவும் எடுக்கும் வேலைகள் நடைபெற்று வந்தன.

ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் பிரபல ஸ்டிரிமிங் தளமான எம்.எக்ஸ்.பிளேயர் நிறுவனமும் இணைந்து இதைத் தயாரிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன.

இந்த வெப் சீரிஸ் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிகளிலும் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீகணேஷை இந்த சீரிஸின் சில பாகங்களை இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீகணேஷ் இயக்கிய சமீபத்தைய படமான குருதி ஆட்டம் திரைப்படம் வெளியாகி போதிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை.. திடீரென வாபஸ் பெற்றதால் பரபரப்பு..!

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி.. என்ன காரணம்?

என் தந்தை ஒரு லெஜெண்ட்; பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும்.. ஏஆர்.ரஹ்மான் மகன்

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மாடர்ன் உடையில் மிரட்டும் போஸ்களில் ரைஸா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments