Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு விஷால் உச்சகட்ட மோதல்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:17 IST)
சிம்பு தொடர்ந்துள்ள வழக்கில் விஷால் விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னே ரிலீஸ் ஆனது. படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர்  சிம்பு இந்த படத்துக்காக 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்தாகவும் ஆனால் முழுதாக 30 நாட்கள் கூட நடித்துத் தரவில்லை எனவும் குற்றம்சாட்டினர். இந்தப்படத்தின் மூலம் எனக்கு 20 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதை சிம்பு திருப்பித்தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனை தீர்க்க போய் விஷாலுக்கும் சிம்புவிற்கு முட்டிக்கொண்டது. மேலும் சிம்பு படத்திற்கு ரெட் கார்டு போட முயற்சி செய்தும் அது முடியாமல் போனது.
 
இந்நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் என் மீது அவதூறு பரப்புவதாகவும், தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு கட்டப்பஞ்சாயத்து போல நடைபெறுவதாகவும், என் பெயரை கலங்கடித்ததற்கு நஷ்ட ஈடாக மைக்கேல் ராயப்பன் தமக்கு ஒரு கோடி ரூபாய் தரவேண்டுமெனவும் சிம்பு  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிம்பு தொடர்ந்துள்ள வழக்கில் மைக்கேல் ராயப்பனும், விஷாலும் விளக்கமளிக்கவேண்டும் என வழக்கை ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments