Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு படத்திற்கு முன்னரே வெளியாகும் சிம்பு படம்: ஒரு ஆச்சரிய தகவல்

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (21:59 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் இலங்கையில் தொடக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் மஹா என்ற படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இந்த கதையை கேள்விப்பட்டு அதில் தன்னுடைய கேரக்டர் கேட்டு இம்ப்ரஸ் ஆன சிம்பு இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரை கொஞ்சம் விரிவாக்கம் செய்யும்படியும் தான் அதற்கு முழு ஒத்துழைப்பு தர தயார் என்று கூறியதாகவும் தெரிகிறது.
 
உடனே படக்குழுவினர் உற்சாகமடைந்து சிம்பு கிட்டத்தட்ட படம் முழுவதும் வரும்படி திரைக்கதையை மாற்றி அமைக்கப்பட்டதாகவும், எனவே இந்த படம் விளம்பரப்படுத்தும் போது சிம்பு படம் என்று விளம்பரப்படுத்தப்பட உள்ளதாகவும் நீண்ட இடைவெளிக்குப் பின் சிம்பு ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு ஆக்‌ஷன் விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே மாநாடு நடப்பதற்கு முன்னதாகவே சிம்பு நடித்த ஒரு அட்டகாசமான திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

திடீரென மொட்டையடித்த ‘காதல்’ பட நடிகை.. சாமியாராக போகிறாரா?

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments