Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடிய விடிய ஒர்க் அவுட் பண்ணி சிக்ஸ் பேக் வைக்க போராடும் சிம்பு - களைகட்டும் மாநாடு!

விடிய விடிய ஒர்க் அவுட் பண்ணி சிக்ஸ் பேக் வைக்க போராடும் சிம்பு -  களைகட்டும் மாநாடு!
, சனி, 18 ஜனவரி 2020 (18:13 IST)
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு பல்வேறு தடைகளை தாண்டி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படம் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கூறும் என தகவல் வெளியாகியது. 
 
சமீபத்தில் தான் இப்படத்தில் பணியாற்றவுள்ள ஹீரோயின், இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர் உள்ளிட்டோரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் மாநாடு படத்தில் நடிப்பதாக புகைப்படத்துடன் தெரிவித்திருந்தனர். எனவே இப்போதுதான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே நடிகர் சிம்பு நீச்சல், உடற் பயிற்சி என இப்படத்திற்காக அயராது உழைத்து ரசிகர்களின் மன மகிழ்ச்சிக்காக பொறுப்புடன் நடந்துகொள்கிறார். அந்தவகையில் தற்போது வெறித்தனமாக  உடற்பயிற்சி செய்யும் வீடியோவை  மாநாடு படத்தின் 
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டு ரசிகர்களை திருப்தி அடைய செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்...பெரிய கம்மல்...முட்ட கண்ணு முழி அழகி வர்ஷா பொல்லம்மா!