Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதம் தள்ளிப்போகும் சிம்பு- தேசிங் பெரியசாமி பட ஷூட்டிங்!

Webdunia
வியாழன், 18 மே 2023 (15:37 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் தேசிங்  பெரியசாமி கவனிக்கப்பட்ட இய்ககுனரானார். அவரை சந்தித்து பாராட்டிய ரஜினி ‘தனக்காக கதை தயார் செய்ய சொல்லியிருந்தார். இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை.

இதையடுத்து தேசிங் பெரியசாமி, இப்போது சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்காக லொகேஷன் தேடுதல் உள்ளிட்ட முன் தயாரிப்புப் பணிகளை இயக்குனர் இப்போது முடித்துள்ளதாகவும் படத்தின் ஷூட்டிங் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்பு நடிப்பிலேயே  அதிக பட்ஜெட் படமாக இந்த படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்காக சில பயிற்சிகளை மேற்கொள்ள சிம்பு லண்டனுக்கு சென்றுள்ளதாகவும், அதனால் ஷூட்டிங் தொடங்க ஒரு மாதம் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments