Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி காலமானார்

Advertiesment
vijayalaskmi
, செவ்வாய், 16 மே 2023 (17:59 IST)
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகை இன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு  சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கடந்த 1980 களில் நடிகர்கள் ரஜினி, கமல்  ஆகியோர் படங்களில் சிறிய வேடங்களில் நடித்து ரசிகர்களின்  கவனத்தை ஈர்த்தவர் நடிகை விஜயலட்சுமி.

இவர், கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது என்ற படம் மூலம் அறிமுகமானார். சினிமாவில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் மட்டுமின்றி, சின்னத்திரையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரணவனன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் பாட்டி வேடத்தில் நடித்து வந்தார்.

சில மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, இதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சமீபத்தில், பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டது.

இதற்கு சிகிச்சை பெற்று இரு தினங்களுக்கு முன் அவர் வீடு திரும்பிய நிலையில், சென்னையில்,  நேற்று அதிகாலை தூக்கத்திலேயே அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது. அவருக்கு வயது ( 70). அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்லீவ்லெஸ் சேலையில் ஸ்லிம் அழகை காட்டும் ஜெயம் ரவியின் மனைவி!