Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை செல்கிறது ‘வெந்து தணிந்தது காடு’ படக்குழு!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (17:59 IST)
சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இரண்டு கட்ட படப்பிடிப்பிலும் சிம்பு மிகவும் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்திற்காக சிம்பு மேலும் உடல் எடையை குறைத்துள்ளார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வந்தது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழுவினர் மும்பை செல்கின்றனர்
 
மும்பையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் 15 நாட்கள் நடைபெறும் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பும் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பை திட்டமிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி வருகிறார் என்பதும், கவிஞர் தாமரை பாடல் வரிகளில், சித்தார்த்தா நுனி என்பவரின் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments