Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டில் ஓவியா, சிம்பு: பட்டைய கிளப்பும் மரண மட்டை கூட்டணி! (வீடியோ இணைப்பு)

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2018 (14:17 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா மிகவும் பிரபலமானார். இணையத்தில் ஆர்மி உருவாக்கும் அளவுக்கு இளைஞர்களின் மனம் கவர்ந்த ஓவியாவுக்கு தற்போது திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
 
இந்நிலையில் நடிகை ஓவியா, பிரபல நடிகர் சிம்புவுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடலை நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஓவியாவின் ரசிகர்கள் பட்டாளம் கொண்டாடி வருகின்றனர்.
 
நடனம், நடிப்பு, இயக்கம், பாடகர் என பல திறமைகளை கொண்ட சிம்பு சமீபத்தில் நடிகர் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இந்த படத்தில் சிம்புவின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
 
இதை தொடர்ந்து இசையமைப்பாளர் சிம்பு புத்தாண்டையொட்டி புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதற்கு மரண மட்டை என பெயர் வைத்துள்ளார். இந்த ஆல்பத்தின் பாடலை பிக் பாஸ் புகழ் நடிகை ஓவியா பாடியுள்ளது இதன் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் அதிகரித்துள்ளது.
 
சிம்பு, ஓவியா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த மரண மட்டை பாடல் இன்று வெளியாகி சக்க போடு போட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments