Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினேகாவிடம் மன்னிப்புக் கோரிய மோகன்ராஜா

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2018 (12:41 IST)
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த வேலைக்காரன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் பேசிய சினேகா வேலைக்காரன் படத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார். என்னுடைய காட்சிகள் மொத்தம் 18 நாட்கள் படமாக்கப்பட்டது. என்னுடைய கேரக்டருக்காக நான் 7 கிலோ உடலை குறைத்தேன். ஆனால் படத்தில் என்னுடைய காட்சி வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது என்று வருத்தம் தெரிவித்தார்.
 
இந்நிலையில் மோகன்ராஜா தற்போது பேசுகையில் வேலைக்காரன் படத்தில் சினேகா நடித்திருக்கும் காட்சிகள், படத்தின் நீளம் கருதி துண்டிக்கப்பட்டதாக கூறினார். இருந்தபோதிலும் வேலைக்காரன் படத்தில் சினேகாவின் கேரக்டர் பிரபலமாகி மிகவும் பேசப்பட்டு வருவதாக கூறினார். ஏனென்றால் சினேகாவின் கேரக்டர் படத்தில் அவ்வளவு முக்கியமானது. இருந்தாலும் நான் தவறு செய்திருப்பதாக சினேகா கருதினால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று மோகன்ராஜா கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் லுக்கில் மிரட்டும் நிதி அகர்வால்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ராம்சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயமாக இருக்கிறது… சிரஞ்சீவி சர்ச்சைப் பேச்சு!

டான் படத்தின் காப்பியா ‘டிராகன்’?… இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆதங்கம்!

பும்ரா இல்லாமல் செல்வது ரொனால்டோ இல்லாமல் உலகக் கோப்பைக்கு செல்வதைப் போன்றது… முன்னாள் வீரர் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments