Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணுவர்தன் இயக்கிய பாலிவுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:37 IST)
அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள ஷெர்ஷா திரைப்படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், முதன்முறையாகப் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதையைப் படமாக எடுக்கிறார். மத்திய அரசு இவருக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான ‘பரம் வீர் சக்ரா’வை வழங்கி கெளரவித்தது.

விக்ரம் பத்ரா வேடத்தில், ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதை, கண்டிப்பாக உங்களை ஊக்குவிக்கும். அத்துடன், உங்கள் முகத்தில் புன்னகையையும் கொண்டுவரும். இந்த கேரக்டரில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் சித்தார்த் மல்ஹோத்ரா. தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்போது இதன் ரிலிஸ் தேதியை தயாரிப்பாளர் கரண் ஜோஹர் அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 2 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments