Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பிரதமர் அவர்களின் துயரத்தில் நான் பங்கு கொள்கிறேன்''- இளையராஜா உருக்கமான கடிதம்

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:08 IST)
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
 

இன்று குஜராத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில் குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது தாயின் இறுதி காரியங்களில் கலந்து கொண்டு மகனாக தனது கடமைகளை நிறைவேற்றினார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு  தமிழக முதல்வர் ஸ்டாலின் இதர மாநில முதல்வர், அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிரதமர்  நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு  மாநிலங்களை எம்பியும், இசையமைப்பாளருமான இளையராஜா  தன் கைப்பட உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

அதில்.  ''நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருந்தமும் அடைந்தேன்.

பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து  எதையும் எதிர்பார்க்காத தாய்!

எனது தாயாரும் அவ்வாறே!  என்னிடம் எதையும் கேட்டதில்லை,  நானும் கொடுத்தில்லை
இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கும் காண முடியுமா?

அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் துயரத்தில் நான் பங்கு கொள்கிறேன்.அன்னை ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments