இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் பார்த்த மூன்று படங்களை பாராட்டி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் வணிகத்தை இந்திய அளவில் விரிவாக்கிய இயக்குனர்களில் ஒருவர். இப்போது அவர் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு 6 மாதங்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தில் அவர் சமீபத்தில் வெளியான மூன்று படங்களைப் பார்த்து அதில் பணியாற்றிய மூன்று கலைஞர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அவரின் சமூகவலைதளப் பதிவில்
-
சூரரைப் போற்று படத்தில் ஜி வி பிரகாஷின் இசையை வெகுவாக ரசித்தேன்
-
அந்தகாரம் படத்தின் ஒளிப்பதிவாளர் எட்வின் சாகோவின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்தது.
-
ஜல்லிக்கட்டு படத்துக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் பிள்ளை சிறப்பான இசையை வழங்கி இருந்தார்.
என மூன்று பேரையும் பாராட்டியுள்ளார்.