Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Shang-Chi and the Legend of the Ten Rings - விமர்சனம்

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (23:49 IST)
நடிகர்கள்: சிமு லியு, டோனி லியுங், ஆவ்க்வாஃபினா, ஃபலா சென், மெங்கர் ஜாங், மிச்செல் யோவ்; இயக்கம்: டெஸ்டின் டேனியல் கிரெட்டன்.
 
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஹீரோக்களின் வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கும் பாத்திரமான ஷாங் - சியின் முழு நீள சாகசம் இது. சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்பட வரிசையில் 25வது படம் இது.
 
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் கதைத் தொடர்ச்சியாக இந்தக் கதை நடக்கிறது என்றாலும் அந்தக் கதைக்கும் இதற்கும் பெரிய உறவில்லை. இந்தப் படத்தின் கதை இதுதான்: டென் ரிங்க்ஸ் அமைப்பின் தலைவனான வென்வூ, தன்னிடம் உள்ள வளையங்களின் சக்தியால் உலகை கட்டியாள்கிறான். நடுவில் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு, அவன் மனைவி இறந்துவிடுகிறாள். ஆனால், மனைவி ஏதோ ஒரு இடத்தில் அடைபட்டுக் கிடப்பதாகக் கருதும் வென்வூ, அந்த இடத்தை திறந்து மனைவியை விடுவிக்க நினைக்கிறான்.
 
“இம்சை அரசன் படத்தை ஒத்துக் கொண்டது என் கெட்ட நேரம்”- நடிகர் வடிவேலு பேட்டி
மீண்டும் திறந்த திரையரங்குகள் மீண்டுவர எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
இதற்காக, தன்னிடமிருந்து பிரிந்துசென்றுவிட்ட மகன் ஷாங் - ஷியையும் மகள் ஜியோலிங்கையும் தன்னிடம் வரவழைக்கிறான். ஆனால், வென்வூவின் மனைவி அடைபட்டுக் கிடப்பதாகக் கருதும் இடத்தைத் திறந்தால், அதில் உள்ள ஒரு சக்தி உலகையே அழித்துவிடும். இருந்தபோதும், அந்த இடத்தை திறக்க நினைக்கிறான் வென்வூ. அந்த இடத்தில் உண்மையில் என்ன இருக்கிறது, வென்வூ மனைவியை மீட்டானா, ஷாங் - ஷியும் ஜியோலிங்கும் தந்தையைத் தடுத்தார்களா என்பதெல்லாம் மீதிக் கதை.
 
சமீபகால மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களில் உள்ள கதைகளோடு ஒப்பிட்டால், மிகத் தெளிவான கதையைக் கொண்டிருக்கிறது இந்தப் படம். ரொம்பவும் சுருக்கமாகச் சொன்னால், உலகிற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைத் தடுக்க கதாநாயகன் செய்யும் சாகசங்கள்தான் இந்தப் படம். ஆனால், கதாநாயகனுக்கும் வெவ்வேறு விசித்திர சக்திகள், விசித்திர உலகம், விசித்திர மிருகங்கள் என சுவாஸ்யமூட்டியிருக்கிறார்கள்.

கலகலப்பிற்கும் சாகசத்திற்கும் பஞ்சமில்லாமல் நகர்கிறது படம். தமிழில் பார்த்தாலும் சரி, ஆங்கிலத்தில் பார்த்தாலும் சரி வசனங்கள் சிரிக்கவைப்பது நிச்சயம். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்சில் கடைசியாக வந்த சில படங்கள், ஏகப்பட்ட பாத்திரங்கள் வெவ்வேறு உலகங்கள் என குழப்பிவந்த நிலையில், இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு நிற்பது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 
தவிர, ஏகப்பட்ட ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் முதல் முறையாக ஒரு ஆசிய சூப்பர் ஹீரோவை இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது மார்வெல். ஆகவே, இந்த ஹீரோவுக்கான கதைச் சூழல், ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே அதற்கேற்றபடி அமைத்திருக்கிறார்கள்.
 
படத்தின் ஹீரோ ஷாங் - ஷி என்றாலும்கூட, தந்தை மற்றும் வில்லனாக வரும் வென்வூவின் பாத்திரமே வெகுவாகக் கவர்கிறது. வென்வூவாக நடித்திருக்கும் டோனி லியூங், பிரபல ஹாங்காங் இயக்குனர் வோங் கார் - வாய் படங்களில் நடித்ததன் மூலம் ஆசிய திரையுலகில் அறியப்பட்டவர். இந்தப் படத்தில் அமர்த்தலாக வந்து, அட்டகாசம் செய்திருக்கிறார்.
 
ஷாங் - ஷி பாத்திரத்தில் நடித்திருக்கும் சிமு லியுவும் சண்டைக் காட்சிகளில் தூள்பரத்தியிருக்கிறார். இருந்தாலும் இந்தப் பாத்திரங்களையெல்லாம்விட, மனதில் நிற்பது ஷாங்-ஷியின் தோழி கேட்டியாக நடித்திருக்கும் ஆவ்க்வாஃபினாதான். படம் நெடுக, சிரிக்கவைக்கிறார் ஆவ்க்வாஃபினா.
 
படத்தின் சில சண்டைக் காட்சிகள் க்ரௌசிங் டைகர் ஹிடன் டிராகன் படத்தை நினைவுபடுத்துகின்றன. அந்தப் படத்தில் நடித்திருந்த மிச்செல் யேவ் இந்தப் படத்திலும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
 
படத்தை ஆங்கிலத்தில் பார்த்தாலும் சரி, தமிழில் பார்த்தாலும் சரி, வசனங்கள் சிரிக்கவைப்பது நிச்சயம்.
 
சினிமாட்டிக் யுனிவர்ஸ் வரிசைக்கு புதிதாக அறிமுகமான சூப்பர் ஹீரோ இந்தப் படத்தில் வெற்றிபெற்றுவிட்டார். இவரை மார்வெல் அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments