Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகர்!

vinoth
சனி, 20 ஜனவரி 2024 (07:45 IST)
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம்,  இஷக், கும்பளங்கி ஆகிய மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் பலமுறை பல சர்ச்சைகளில் சிக்கி செய்தியாகியுள்ளார். சமீபத்தில் இவரும் மற்றொரு சக நடிகருமான ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவரும் போதை பொருட்களை பயன்படுத்தி, ஷூட்டிங்குக்கு வந்து படக்குழுவினருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாக தயாரிப்பாளர் ரஞ்சித், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றில் புகாரளித்திருந்தார்.

இதையடுத்து இருவரும் மலையாள நடிகர்கள் சங்கம் தடை விதிக்க முடிவு செய்தது. பின்னர் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ஷேன் நிகம் இப்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ஆர் டி எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது ஷேன் நிகம் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். மெட்ராஸ்காரன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னை பாடகியை திருமணம் செய்யும் பெங்களூரு பாஜக எம்பி.. நிச்சயதார்த்தம் முடிந்தது..!

புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ‘லப்பர் பந்து’ படத்தின் தொலைக்காட்சி பிரிமீயர்!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையும் தற்கொலை…!

கழிவுநீர் தொட்டி மேல் உணவு சமையலா? சூரியின் உணவகத்திற்கு சீல் வைக்க கோரி புகார் மனு!

சஞ்சய் நினைத்திருந்தால் 100 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கலாம்… தம்பி ராமையா பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments