Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதீஷ் நடிக்கும் ‘சட்டம் என் கையில்’ ரிலீஸ் தேதி.. கோட் வெளியான சில நாட்களில்..!

Siva
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (11:39 IST)
தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதன் பின்னர் ஒரு சில நாட்களில் சதீஷ் ஹீரோவாக நடித்த சட்டம் என் கையில் என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சதீஷ் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ‘நாய்சேகர்’ உள்பட  சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ’சட்டம் என் கையில்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5ஆம் தேதி கோட் வெளியாக இருக்கும் நிலையில் அதன் பின் இரண்டே வாரங்களில் சட்டம் என் கையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாச்சி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு முத்தையா ஒளிப்பதிவும் மார்ட்டின் டைட்டஸ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். ஜோன்ஸ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்லோமோஷன் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் ரஜினியால் தாக்குப் பிடிக்க முடியாது… ராம்கோபால் வர்மா கருத்து!

300 கோடி ரூபாய் கலெக்‌ஷன் படத்துக்கு பார்ட் 2 இல்லாமலா?... வெங்கடேஷ் கொடுத்த அப்டேட்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஆண்டனி படத்தின் மூலம் சினிமாவுக்குத் திரும்பிய காதல் ஓவியம் பட நடிகர்!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மற்றொரு இயக்குனர்!

குட் பேட் அக்லி பார்க்க வருபவர்கள் இதை எடுத்துட்டு வாங்க… பில்டப் கொடுக்கும் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments