Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்குமார் படத்தின் சூட்டிங் தொடக்கம்! வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:17 IST)
நடிகர் சசிகுமார் இப்போது நடித்து வரும் பகைவருக்கு அருள்வாய் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று ஹூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார், அதன் பின்னர் ஈசன் என்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். ஆனால் அவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதால் தொடர்ந்து நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம், சிங்கமடா, ராஜவம்சம்m, நா நா, பரமகுரு, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ’பகைவனுக்கு அருள்வாய்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அனிஸ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘திருமணம் என்னும் நிக்கா’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சசிகுமாரோடு வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், சுப்ரமண்யபுரம் ஸ்டைலில் 1980 களில் நடக்கும் கதையாகவும், தற்போதைய காலத்திற்கு ஏற்பட்படிஉருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
 

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 80 களின் ஸ்டைலில் நீண்ட முடி மற்றும் அந்த காலத்தைய உடைகளோடு சசிகுமார் உள்ள போட்டை வைரலானது. மீண்டும் தமிழ் சினிமாவில் சசிகுமாருக்கு ஒரு பிரேக் கொடுக்கும் படமாக இது இருக்கும் எனத் தெரிகிறது.

இன்று இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது.இதுகுறித்த புகைப்படத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்புகைப்படம் ஒரு அரண்மனைக்கு அருகில் எடுக்கப்பட்டுள்ளதால், இது எண்பதுகளில் வரும் ராஜாகாலத்து கதையாகவோ திரில்லவர் கதையாகவோ இருக்கலாம் என கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments