Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா ரஞ்சித்தின் சார்பட்டா ஓடிடி ரிலிஸா? முன்னணி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (08:33 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

காலா படத்தின் வெளியீடு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு  பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து இப்போது வெளியாகி படத்தின் கதாபாத்திர அறிமுகங்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளன.

எல்லா பணிகளும் முடிந்து ரிலிஸுக்கு தயாரான நேரத்தில் கொரோனா இரண்டாம் அலையால் இந்த படத்தின் ரிலிஸ் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஓடிடிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. முன்னணி நிறுவனமான ஜி 5 தளத்தில் படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments