சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது எனவும் தடுப்பூசிகள் வந்தபின் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
 
									
										
			        							
								
																	அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
 
									
											
									
			        							
								
																	இந்நிலையில்  கொரொனா 3 வது அலையை எதிர்கொள்ள  தமிழக முதல்வர் ஸ்டாலின்  ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில், கொரொனா தடுப்பூசில் இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம் கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	அதேபோல் நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது எனவும் தடுப்பூசிகள் வந்தபின் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.