Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக ஐந்து கண்டங்களில் வெளியாகும் தமிழ்ப்படம்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (09:07 IST)
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் ரிலீசுக்கு முந்தைய பிசினஸ் தமிழ் திரையுலகை அதிர வைத்துள்ள நிலையில் இந்த படம் முதல் முதலாக ஐந்து கண்டங்களிலும் வெளியாகும் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெறவுள்ளது. மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த படம் வெளியாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனம் அறிவித்துள்ளது. அனேகமாக உலகம் முழுவதும் இந்த படம் 1200க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பு உள்ளது.

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' திரைப்படங்கள் இதைவிட அதிக திரையரங்குகளில் வெளியாகியிருந்தாலும் இந்த இரண்டு படங்களும் நேரடி தமிழ்ப்படங்கள் இல்லை என்பதும் 'சர்கார்' நேரடி தமிழ்ப்படம் என்பதால் இந்த பெருமையை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments