மற்றொருவரின் கதையை முருகதாஸ் திருடி சர்கார் எடுத்து விட்டார் என எழுந்த சர்ச்சையில் இரண்டு கதைகளுக்கும் ஒன்றான கதையின் போக்கை பாக்யராஜ் உடைத்து கூறியுள்ளார்.
சர்கார் கதை திருட்டு சம்மந்தமாக உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கம் சர்கார் கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக் கூறியுள்ளது. இதனை இயக்குனர் முருகதாஸ் மறுத்துள்ளார். அதேபோல், இரவு பகலாக கஷ்டப்பட்டு திரைக்கதையை உருவாக்கினோம் என எழுத்தாளர் வசனகர்த்தா ஜெயமோகனும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி நடிகர் பாக்யராஜ் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒருவனின் ஓட்டு மறுக்கப்படுகிறது. அதாவது அவரின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விடுகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த ஹீரோ நீதிமன்றத்தில் முறையிடுகிறான். இதனால், தேர்தல் ரத்தாகிறது. இதனால், அரசியல்வாதிகளின் கோபத்திற்கு ஆளாகிறான். அதன் பின் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அதில், போட்டியிட்டு வெற்றி பெறுகிறான். அதன்பின் முதல்வர் ஆகவும் வாய்ப்பு வருகிறது. அதன் அவன் என்ன செய்கிறான் என்பது கதை. இந்த புள்ளி இரு கதைகளிலும் ஒன்றாக இருக்கிறது” என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.
இதைக்கேட்ட நெட்டிசன்கள் இப்படி கதையை போட்டு உடைத்துவிட்டீர்களே.. யரும் தியேட்டருக்கு போக மாட்டாங்க என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.