Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்தார் 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது…!

vinoth
திங்கள், 29 ஜனவரி 2024 (07:39 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முன்னெடுப்பும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் இப்போது சர்தார் 2 படத்துக்கான வேலைகளை இயக்குனர் மித்ரன் தொடங்கியுள்ளதாகவும், ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது நலன் குமாரசாமி மற்றும் பிரேம் குமார் இயக்கத்தில் நடித்து வரும் படங்களை முடித்தபின்னர் இந்த படத்தில் கார்த்தி இணைவார் என சொல்லப்படுகிறது.  இந்நிலையில் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்த படத்தின் பூஜை சென்னையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments